மறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா? ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்.

0
32

சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நாயகியாக நடித்த மேக்னா ராஜை நீண்ட காலமாக காதலித்து வந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  மேக்னா ராஜ் கருவுற்றிருந்த நிலையில், இருவரும் தங்களின் முதல் குழந்தையின் வருகைக்காக காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார்.

கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட்டுடன், தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வு படங்களை பகிர்ந்து கொண்டிருந்தார் மேக்னா ராஜ். இது ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிரஞ்சீவி சார்ஜாவின் மரணத்துக்கு பிறகு அவருக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எழுதிய மேக்னா ராஜ், “நீங்கள் என்னை அவ்வளவு காதலித்திருப்பதால்தான் உங்களால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை. இல்லையா? நம் காதலின் சின்னமாக, நீங்கள் எனக்குத் தந்த விலை மதிக்க முடியாத பரிசுதான் நம் குழந்தை. அந்த இனிய அற்புதத்துக்கு நான் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். உங்களை நம் குழந்தை வடிவில் மீண்டும் இந்த பூமிக்குக் கொண்டு வரும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் உங்களைத் தாங்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் புன்னகையைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அறையையே ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். ஐ லவ் யூ” என்று தெரிவித்திருந்தார்.

மறைந்த சிரஞ்சீவி சார்ஜா மறுபடி வந்திருப்பதாக குடும்பத்தினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.