சொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்… அரக்கர்கள், ராஜ குடும்பத்தினராக மாறிய ஹவுஸ் மேட்ஸ்.

0
6

மேலும் அரக்கர்கள், அரச குடும்பத்தினர் உடையில் இருப்பவர்களை டார்ச்சர் செய்ய வேண்டும். அரக்கர்களும், அரக்கிகளும் என்ன தொல்லை கொடுத்தாலும் அதற்கு மற்றவர்கள் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் சிலையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான் டாஸ்க்.அதில் அனிதா, ஆஜித், அர்ச்சனா, ஆரி, சுரேஷ், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி ஆகியோர் அரக்கர்களாக உள்ளனர். ரியோ, சனம், சம்யுக்தா, வேல்முருகன், நிஷா, ரம்யா, பாலாஜி ஆகியோர் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சொர்க்கபுரி ராஜ குடும்பத்திற்கும், மாயபுரி அரக்க குடும்பத்திற்கும் இடையே நடக்கும் கடும் போட்டி என பிக் பாஸ் அறிவிக்கிறார்.ராஜ குடும்பத்தினர் சிலையாக அமர்ந்து அரக்கர்கள் எது செய்தாலும் அசையாமல் இருக்க வேண்டும். அதன்படி ரியோ மற்றும் சோம் ஆகியோரை அரக்கர்களாக உள்ள சுரேஷ் உள்ளிட்டோர் தொல்லை செய்கின்றனர். மேலும் சுரேஷ் இது எங்கள் வாரம் கசக்கி பிழிந்து கரி பூசி விடுவோம் என்று கூறியவாறு சோம் மீதி கரியை பூசுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் யாரோ ஒரு போட்டியாளருடன் மோதலில் ஈடுபடுகிறார். அதன் பின் பேசும்போது ஆஜித் தான் என்னை முதலில் தொட்டார்’ என சுரேஷ் சக்ரவர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

மேலும் மேலே இருந்து கையை எடுங்கள் என பாலாஜி முருகதாஸ், சுரேஷிடம் கோபமாக பேசி இருக்கும் காட்சிகளும் ப்ரமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில் ரியோவுக்கு புலிகேசி கெட்டப் வழங்கப்பட்டு உள்ளது.

அதற்காக தாடியை எடுக்கும் ரியோ, தாடி உடன் இருக்கும்போது தான் மாஸாக இருக்கும். தற்போது பார் நான் குழந்தை போல இருக்கிறேன் என கூறுகிறார். வேல்முருகன் மற்றும் நிஷா ஆகியோர் ராஜா, ராணியாக உள்ளனர். அரக்கர்கள் தலைவனாக சுரேஷ் இருப்பது காட்டப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் என்றாலே ஏதோ ஒரு பிரச்சனையை உருவாக்க தான் இருக்கும். இந்த நிலையில் சுரேஷ் அரக்கனாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி காரசாரமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரியோவிற்கும், சுரேஷிற்கும் இடையே ஏற்கனவே மோதல் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் பிரச்சனை வரும் என நினைத்த நிலையில், சுரேஷ் – பாலாஜி இடையே சண்டை வருவது ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளதால் இன்று பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.