அரசியல் நோக்கங்களுக்காக காணிகளின் எல்லைகளை மாற்றியமைக்க முடியாது : கிழக்கு மாகாண ஆளுநர்

0
20

இனங்களின் அடிப்படைக்கேற்ப நிலங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பது ஆளும் அரசின் நோக்கமாகாதெனவும் அத்தோடு அரசியல் நோக்கங்களுக்காக அவை இடம்பெற ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாதெனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் கூறினார்.

மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களின் எல்லையின் மத்தியில் அமைந்திருக்கும் ”திவுல்பத்தான” எனும் பிரதேசத்தின் நிலங்களை விவசாயச் செய்கைக்காக மக்களுக்கு வழங்குவது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக (14) காலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்களோடு கலந்துரையாடும்போதே ஆளுநர் அனுராதா யஹம்பத் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக்காணி மட்டக்களப்பு மக்களுடைய கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரையென்றும் இதனை விவசாயத் தேவைக்காக ஒதுக்கும் தீர்மானத்தை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநரை கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர், விவசாயச் செய்கை சம்பந்தமாக இந்த நிலங்களை ஒதுக்குவதற்கு பிரதான காரணம் சுய உற்பத்தியை பெருக்குவதுடன் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உணவுப் பண்டங்களை குறைப்பதற்கும் இது உதவுமென  தெரிவித்தார்.