சட்டத்துக்கு முரணாக கடத்தப்பட்ட மரக்குற்றிகள் பளை போலீசாரால் மீட்பு

0
1

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் சட்டத்துக்கு முரணாக வேம்பு மற்றும் நாவல் மரங்களை அழித்து கடத்த முற்பட்ட வேளை போலீசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இடத்திற்கு விரைந்த பளை போலீசார் அங்கு மரக்குற்றிகள் அறுக்கப்பட்டு ஓர் இடத்தில் குவிக்கப்பட்டிருந்தை அவதானித்துடன். குறித்த மர குற்றிகள் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றப்பட்டு கொண்டிருப்பதையும் அவதானித்து குறித்த இடத்திற்கு விரைந்து பொழுது மரக்குற்றிகளை உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்

பின் உழவு இயந்திரம் மற்றும் மரக்கட்டைகளை பளை போலீசார் மீட்டு வந்துள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்