தர்மபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் பகுதியில் கணவன் மனைவியை தாறுமாறாக வெட்டியுள்ளார்.

0
7

தர்மபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தர்மபுரம் பகுதியில்16/10/2020 அன்று மாலை கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக விபரீதம் ஏற்பட்டுள்ளது.  அன்றைய தினம் மதுபோதையில் வந்த கணவன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கைகலப்பாக மாறி கணவன் மனைவியை தாறுமாறாக வெட்டியுள்ள நிலையில் காயமடைந்த மனைவியை அயலவர்களின் உதவியோடு தர்மபுரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கணவன் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட கத்தி ஒன்றையும் மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை தர்மபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.