ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தல்!

0
91

ஜனாதிபதி செயலகத்தை தபால், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பிற்கான சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனை மற்றும் பரிந்துரைக்கு அமைய இந் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லாமல் பொதுமக்கள் தமது தேவைகளை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பு பிரிவின் 011 4 354 550 மற்றும் 011 2 354 550 என்ற தொலைபேசி இலக்கத்திலும் இது தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி செயலகத்தின் பொது மக்கள் தொடர்பு பிரிவு மற்றும் ஜனாதிபதி நிதி தொடர்பிலும் தொடர்பு கொள்ள முடியும்.

[email protected] என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.