‘மாஸ்டர்’ படத்தின் ‘Quit Pannuda’ பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ் – கொண்டாடும் ரசிகர்கள்.

0
7

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது.

அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் திரையரங்குகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் ‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இதனிடையே பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டால் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘Quit Pannuda’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் விஜய் மற்றும் அனிருத் ரசிகர்கள்.