குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

0
9

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்சா குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.