பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பாக உடன் கவனம் எடுக்கவும் பச்சிலைபள்ளி தவிசாளர்

0
44

பச்சிலைபள்ளி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பாக உடன் கவனம் எடுக்குமாறு பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்கள் ஜனாதிபதி மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்

பச்சிலைபள்ளி பிரதேசத்தின் இந்திராபுரம் வீதி ,மற்றும் பறவைக்குள வீதி நரசிம்ம வைரவர் வீதி போன்றவற்றுக்கு புதிதாக கடவை அமைக்க வேண்டும் என்றும் முகமாலை பிரதான வீதி, சின்னதாளையடி வீதி தர்மக்கேணி வீதி, வேம்போடுகேணி கச்சார்வெளி இணைப்பு வீதி போன்ற இடங்களில் உள்ள வீதிக்கடவைகள் பாதுகாப்பான கடவைகளாக மாற்ற பட வேண்டும் எனவும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ் விடையம் தொடர்பாக மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.