24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 36 பேர் கைது

0
2

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை மொத்தமாக 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் உட்பட 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு உத்தரவை மதித்து செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் பொருட்கொள்வனவுக்கு இன்றும் நாளையும் அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.