கொரோனா தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து பிரதேசமாக கொழும்பு!

0
107

கொரோனா தொற்று ஏற்படக்கூடிய அதிஆபத்து பிரதேசமாக கம்பஹாவுக்கு அடுத்தப்படியாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 10 ஆயிரம் என்ற அளவில் PCR பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஷேனல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இங்கு தற்போது நாளொன்றுக்கு 6 ஆயிரம் PCR பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. இது போதுமானதல்ல. நாளொன்றுக்கு 10 ஆயிரம் வரை PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என அவர் கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரிசோதனை முறை மேம்படுத்தப்படவேண்டும். சரியான பரிசோதனை கொள்கை அறிவிக்கப்பட வேண்டும் என்பதுடன்  கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்ட உடனேயே சுகாதார அதிகாரிகள் தகவல்களை வெளியிடவேண்டும் என்றும் மனித வலு, PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றை அரசாங்கம் கருத்திற்கொண்டு PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்படவேண்டும் என வைத்திய கலாநிதி ஷேனல் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.