எதிரெதிரே சந்திக்க தயாராகும் ரணில்-மைத்திரி; 19 இல் விசாரணை!

0
10
அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை விசாரணைக்கு அழைத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி ஆஜராகும்படி அந்த ஆணைக்குழுவிலிருந்து நோட்டீஸ் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க செய்த முறைப்பாட்டின் விசாரணையில் இவர்கள் இருவரிடத்திலிருந்தும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள்தவிர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கும் குறித்த ஆணைக்குழு அன்றைய தினத்தில் வரும்படி அழைத்திருக்கின்றது.