கல்விக் கட்டமைப்பு மறுசீரமைப்புகள் தொடர்பில் விசேட சந்திப்பு

0
17

கல்விக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புகள் தொடர்பில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித்துக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

எதிர்காலத்தில் கல்விக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள மறுசீரமைப்புகளுக்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட அனைத்து கிறிஸ்தவ மக்களினதும் முழுமையான ஆதரவை பெற்றுத் தருவதாக இந்தச் சந்திப்பில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் உறுதியளித்தார்.

மதசார் நிறுவனங்கள் மற்றும் கல்விக் கட்டமைப்புக்கிடையில் தொடர்புகள் காணப்படுவது அத்தியவசியமாகுமென்றும் பேராயர் கல்வி அமைச்சரிடம் இச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.