மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

0
4

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் தற்போது  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.

அதன்படி உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கும்  உத்தரகண்ட் மாநிலத்தில் 1 இடத்திற்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையும் நவம்பர் 9ஆம் திகதியே நடைபெறும் எனத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் அக்டோபர் 27ஆம் திகதிக்குள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டும் என வேட்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.