சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக்கி வெளியாகவுள்ள வர்த்தமானி

0
2

இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக்கி வெளியிடப்படவுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (13) அரச அச்சகத்திற்கு ஒப்படைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைவாக சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா வரையில் அபராதம் அல்லது 6 மாதத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரையான சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.