பேருந்து – ரயில் மோதிய விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி

0
49

தாய்லாந்தில் 60 பயணிகள் சென்ற பேருந்து ஒன்றின் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்தனர்.

தாய்லாந்து நாட்டில் சமுத் பிரகான் மாகாணத்திலிருந்து மத விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று ஞாயிறுக்கிழமை  காலை 60 பேர் பேருந்து மூலம் சச்சோயெங்சாவோவில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது பாங்காக்கிலிருந்து 50 தொலைவில் உள்ள ரயில்வே கிராஸிங் பகுதியில் பேருந்து சென்றபோது அங்கு வந்த சரக்கு ரயில் ஒன்று பேருந்து மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட பேருந்து முற்றிலும் நொறுங்கி சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.