மாந்தை கிழக்கு பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா

0
20

மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா நேற்று (22) நடைபெற்றுள்ளது.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த 2020 ஆம் ஆண்டுக்கான பண்பாட்டுப் பெருவிழா நேற்று (22) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பாண்டியன் குளம் பிரதான சந்தியில் இருந்து பாரம்பரிய கிராமிய கலை விழுமியங்களை சித்தரிக்கும் கரகாட்டம், கோலாட்டம், காவடி, கும்மி, குதிரையாட்டம் என்பவற்றுடன் தற்கால ஆரம்பகால வாழ்வியலை சித்தரிக்கும் ஊர்திகள் பேரணியாக பிரதேச செயலக வளாகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து புலவர் வள்ளுவர் எழுதிய நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், பிரதேச மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றன.

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செயலாளரும், கலாச்சார பேரவையின் தலைவருமான றஞ்சனா நவரத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க. விமலநாதன், கணக்காளர் த. ராஜீவன், காரைநகர் பிரதேச செயலாளர், அரச திணைக்கள அதிகாரிகள், மத தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.