முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

0
82

நாளை முதல் பேருந்து ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி பயணிக்க வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பேருந்துகளுக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகள் பயணிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கான ஒத்திகை கடந்த 15 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் அந்த நடைமுறைக்கு பல தரப்பினர் எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.

அந்த முறைமை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் முதல் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாதிருக்க தீர்மானித்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.