யுபுன் அபேகோன் சாதனை

0
16

இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் ஜேர்மனியில் நேற்று (09) இடம் பெற்ற சர்வதேச டெஸ்ஸவ் (Dessau) மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 10.16 செக்கன்களில் ஓடி முடித்து சாதனை படைத்துள்ளார்.

ஹிமாஷா எஷான் என்பவர் இதற்கு முன்னர் 10.22 செக்கன்களில் தேசிய சாதனையை படைத்திருந்த நிலையில் யுபுன் அபேகோன் குறித்த போட்டியில் இலங்கையின் தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தனது ட்விற்றர் கணக்கில் இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளதோடு பெருமைப்படும் தருணம் இதுவென்றும் சிறந்த சாதனையெனவும் தெரிவித்துள்ளார்.