24 மணி நேரத்தில் 82 பேர் கைது

0
4

நாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 82 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன் 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தேர்தல் தொடர்பாக மொத்தமாக 72 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனரட்ன தெரிவித்துள்ளார்.

அவற்றுள் 55 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பாகவும் ஏனைய 17 முறைப்பாடுகள் சிறு சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.