ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பயிர்ச்செய்கை!

0
0

ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

சூரியவெவ பகுதியில் வைத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹம்பேகமுல, அலுத்வெவ, கிளிம்புன்ன வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் வாழைத் தோட்டம் செய்வதாக கூறி குறித்த கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த கஞ்சா பயிர்செய்கையை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் அழித்ததோடு, குறித்த நிலத்தை ஆயுர்வேத திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.