மகளை கொலை செய்த தந்தைக்கு மரணதண்டனை

0
1

மகளை கொலை செய்த தந்தை ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி பிரமில ரத்நாயக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நுவரெலியா – ராகலை ஹல்கன்னோயாவை சேர்ந்த 41 வயதான சோமசுந்தரம் சுரேஷ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் 10 ஆம் மாதம் 24 ஆம் திகதி இரவு தனது வீட்டில் மூன்றரை வயதான சுரேஷ் இந்தியா என்ற தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியின் மனைவி கடந்த 2014ஆம் குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த பெண் மற்றுமொரு இலங்கை நபருடன் மறைமுக உறவை வைத்து கொண்டு தனது குழந்தைகளை கவனிக்காது இருந்துள்ளதால், குற்றவாளி தனது மூன்றரை வயதான மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக ராகலை பொலிஸார் நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.