முடிவுகள் வெளியாகும் முன்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர புதிய வேலைத்திட்டம்

0
3

பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கட்சி அரசியல் சம்பந்தப்படாத இளைஞர், யுவதிகளை இணைத்து அரசியல் அமைப்பொன்றை ஏற்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உண்மையான தேசப்பற்றாளர்கள் என அந்த அமைப்புக்கு பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த அமைப்புக்கு பிரபல அரசியல்வாதிகளின் ஆசியும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்திருந்த மங்கள சமரவீர, பின்னர் நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன் தனக்கு விருப்பு வாக்கை வழங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.