பொய் சாட்சி வழங்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

0
3

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் பொய் சாட்சியை வழங்கியமை சம்பந்தமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலான வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கில் பொய் சாட்சி கூறியதாகவே உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டு, கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின், எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.