வாக்குச்சாவடிகள் அருகில் சட்டவிரோதமாக மாதிரி வாக்குச் சீட்டு விநியோகம்

0
7

மொனராகலை – ஹெத்திமலே பிரதேசத்தில் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மாதிரி வாக்குச் சீட்டுக்களை விநியோகித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஹெத்திமலே பொலிஸ் பிரிவில் உள்ள சில வாக்குச் சாவடிகளுக்கு அருகில் இந்த மாதிரி வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று தினங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இப்படியான மாதிரி வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த நிலையில் இன்று நடந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் அந்த கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.