29 பாராளுமன்ற ஆசனங்களுக்காக வடக்கு- கிழக்கில் இத்தனை பேர் போட்டியா?

0
77

இம்முறை வடக்கு, கிழக்கில் 20 இலட்சத்து 71 ஆயிரத்து 527 பேர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் 12 இலட்சத்து 12 ஆயிரத்து 655 பேரும் வடக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 58 ஆயிரத்து 872 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

29 பாராளுமன்ற ஆசனங்களுக்காக வடக்கு- கிழக்கில் 85 அரசியல் கட்சிகள் 112 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 1,768 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வன்னி மாவட்டத்தில் 06 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கிழக்கில் 16 பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 49 அரசியல் கட்சிகளும் 70 சுயோட்சைக் குழுக்கள் சார்பாக 1,033 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், 22 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் 07 ஆசனங்களுக்காக 20 அரசியல் கட்சிகள், 34 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 540 பேர் போட்டியிடுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 189 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாக்களிக்கச் செல்பவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வாக்களிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.