மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தீபிகா உடகம பதவி விலகல்

0
4

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தீபிகா உடகம தனது பதவியை எதிர்வரும் செப்டெம்பர் முதல் அமுலாகும் வகையில் இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளார்.

அரசியலமைப்பை சபை நேற்று நாடாளுமன்றில் கூடிய போதே இந்த இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை இறுதியாக ஒன்று கூடியது. நேற்று மாலை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை ஒன்று கூடி இருந்தது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க ஆகியோர் உட்பட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேர் இதில் கலந்து கொண்டனர்.

எவ்வாறாயினும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இதில் கலந்து கொள்ளவேண்டி இருப்பினும் அவர் சமூகமளிக்கவில்லை.