சிறைச்சாலைக்கு ஹெரோயின் கடத்திய பூனை

0
4

கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பூனையின் ஊடாக ஹெரோயின் கடத்தல் இடம்பெறுவதாக சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (Memory card) ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிக்கும் பொருட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.