இந்தியாவை கதிகலங்க வைக்கும் கொரோனா

0
25

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன் 775 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா மொத்தம் 1,583,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 775 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 1,020,582 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதுடன் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 528,242 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.