2021 ஆம் ஆண்டு ஜனவர் முதலாம் திகதி தொடக்கம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாகக் கூறி வந்த நிலையில், அவர்கள் அந்நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் நாளை முதலாம் திகதி வரவுள்ள நிலையில் திடீரென இன்றைய தினம், ”முதலாம் திகதி 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படாது அது பற்றிப் பின்னர் தீர்மானிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று நேற்றல்ல மிக நீண்ட காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றமையே வரலாறு. இதற்கு அவர்களுக்காகக் குரல்கொடுக்க அவர்களது பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் தமது சுயநலன்களுக்காக மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுபவர்களுடன் சேர்ந்து அவர்களை ஏமாற்றி வருகின்றமையே முக்கிய காரணமாகும்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்குத் துணைபோகும் ஏமாற்றுக்காரர்கள் உள்ளவரை மலையகத் தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வுக் கனவு இப்படியேதான் கலைந்து செல்லும்.
