January 22, 2021, 7:54 pm

ஹெரோயின் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது

வவுனியா இலுப்பையடிப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் ஹெரோயின் விற்பனை இடம்பெற்று வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கிற்கமைய, ஹெரோயின் கொள்வனவு செய்வதற்காக பொலிசாரால் திட்டமிடப்பட்டு நபர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரால் அனுப்பப்பட்ட நபர் போதைப்பொருளை கொள்வனவு செய்ததுடன்,விற்பனை செய்த நபரை பொலிசாரிடம் அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் குறித்த நபரை கைது செய்ய முனைந்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்தது.

ஹெரோயின் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தான் ஐயப்பன் விரதம் அனுஸ்டித்து வருவதாகவும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடவில்லை என்றும் தன்னை கைதுசெய்ய வேண்டாம் என்றும் பொலிசாரிடம் கெஞ்சியுள்ளார். இதனால் குறித்த பகுதியில் பொது மக்கள் ஒன்று கூடியதுடன், குழப்பமான நிலையும் ஏற்ப்பட்டிருந்தது. பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் மேலும் போதைப்பொருள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வவுனியா சதோசவிற்கு பின்பான பகுதியில் பொலிசாரால் தேடுதல் நடாத்தப்பட்டு வருகின்றது.

Related Articles

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது – தாழ்நில பகுதி மக்கள் அவதானம்

கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசன நிணைக்கள பொறியியலாளரின் ஆலோசனை க்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல...

மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு..!

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும்...

Stay Connected

6,377FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது – தாழ்நில பகுதி மக்கள் அவதானம்

கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசன நிணைக்கள பொறியியலாளரின் ஆலோசனை க்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல...

மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு..!

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும்...

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் வேண்டும்!

தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின்...

அவுஸ்திரேலியா இனி ஒரு அணியே இல்லை! -இங்கிலாந்து முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான் அவுஸ்திரேலியா எல்லாம் இனி ஒரு அணியே இல்லை, இந்தியாவை தோற்கடிப்பதில் இங்கிலாந்து கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய...