January 20, 2021, 12:16 pm

ஸ்ரீலங்கா இராணுவம் எந்தவொரு போர்க்குற்றமும் புரியவில்லை!:கமல் குணரத்தன

ஸ்ரீலங்கா இராணுவம் படுகொலைகளில் ஒருபோதும் ஈடுபடவில்லை. போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எனவே, நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்.’ இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கண்ணியமானது இராணுவத்தினருக்கு எதிராக அடுத்துவரும் காலப்பகுதியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம். இதற்கு சில அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. என்று கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரை மையப்படுத்தி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,
‘2009ஆம் ஆண்டு முதல் எமது இராணுவத்துக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாம் படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவம் கிடையாது.
போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. எமது இராணுவம் தமிழ் மக்களை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவமாகும். எமது இராணுவம் எந்தவொரு பொதுமகனை கொல்லவுமில்லைத் துன்புறுத்தவுமில்லை.
இதனால் எமக்கு எந்தவொரு அச்சமும் இல்லை. அதேவேளை, பிரிவினைவாதத்துக்கும், அடிப்படைவாதத்துக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்கூடும் என அண்மையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அவ்வாறானதொரு நிலைமை உருவாகுவதற்கு இங்கு இடமளிக்கமாட்டோம். ஒரு காலத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவர் இருந்தார். அவரும் ஆயுதமேந்தி நாட்டு மக்களை இல்லாதொழிக்க முற்பட்டார். ஆனால் அவரது திட்டம் நிறைவேறவில்லை. அப்படி இனி ஒரு நிலை ஏற்படாது.
ஆகவே தீவிரவாதம், பயங்கரவாதம், கடும்போக்குவாதம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களின் திட்டம் நிறைவேறுவதற்கு இடமளிக்கப்படாது. அதனைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களது உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் அடிமைகளாக நோக்கப்பட்டு அடக்கியொடுக்கப்பட்டதன் விளைவாக அஹிம்சை வழியில் அவர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகள் ஆயுத வழியில் அடக்கப்பட்டதன் காரணமாகவே அடக்குமுறைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத தமிழ் மக்கள்தான் இறுதியாக ஆயுத வழியை நாடி தமது உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அதற்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத் தமிழ் மக்கள் தமது தலைமையாக ஏற்றிருந்தனர்.
இந்நிலையில் இறுதியில் பல நாடுகளது துணையுடன் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டது. இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற போரில் தமிழர்கள் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையும், தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தமையும், தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் ஸ்ரீலங்கா அரசபடைகள் கைதுசெய்து ஈவிரக்கமின்றிச் சித்திரவதை செய்து சாகடித்தமையும், விசாரணை எனப் பலரை அழைத்துச் சென்ற இராணுவம் அவர்களை இன்றுவரை விடுதலை செய்யாது இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்து வைத்து சித்திரவதை செய்கின்றமை, ஊடகவியலாளர் இசைப்பிரியாவை நிர்வாணப்படுத்திச் சித்திரவதை செய்வது உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான பல போர்க்குற்றங்களை ஸ்ரீலங்கா இராணுவம் செய்துள்ளமை தொடர்பான ஆதாரங்கள் பல வீடியோ, கண்கண்ட சாட்சியங்களாகப் பதியப்பட்டுள்ளன.

Related Articles

நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...

குருந்தூர் மலை விவகாரம்! தமிழ் மக்களுக்கு விதுர விக்ரமநாயக்க விடுத்துள்ள செய்தி!

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.குருந்தூர் மலை தொல்பொருள்...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது.லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ்...

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு!!!

 தாம் எதைச் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்டாரோ அதனை செவ்வனே செய்து முடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அத்துடன் மேலும் பல விடயங்களை செய்துள்ளதாகவும் தமது பிரியாவிடை உரையில் அவர் கூறியுள்ளார்.YouTube காணொளியொன்றில், ஜனாதிபதி...