January 17, 2021, 10:06 pm

வெடிபொருட்கள் மீட்பு; முன்னாள் தளபதி கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே.பண்டார தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கரடியனாறு, பதுளை வீதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோகிராம் அமோனியா, டெட்டனேட்டர் குச்சி 729, சோவா வயர் 6 ஆயிரம் அடி, முலைவெடி 31, கரியம் 500 கிராம் என்பன மீட்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் லக்கி வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியாக ஜெயந்தன் படையணியில் 1991 இலிருந்து 1994 வரை இருந்துள்ளவர் என தெரியவருகிறது.

குறித்த நபர் கல்குவாரி தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், அதற்கான அனுமதிப்பத்திரத்துடன் வெடிபொருட்களை பயன்படுத்தி கல் உடைத்து வந்துள்ள நிலையில் கடந்த மாதம் இதற்கான அனுமதிப் பத்திரம் முடிவடைந்துள்ளதையடுத்து வெடிபொருட்களை கொள்வனவு செய்து அவர் மறைத்து வைத்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!

உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...

Stay Connected

6,230FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கிளிநொச்சி முரசுமோட்டயைில் விபத்து -இளைஞன் பலி!

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில்  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீீீதி முரசுமோட்டை பகுதியில் இரவு 11 45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!

உண்ணாவிரதம் இருக்கும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிறீதரன் எம்.பி!கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில்இறுதியாக...

உண்ணாவிரதம் இருக்கும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர் உறுப்பினர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்பு கூற வேண்டும்- சிவஞானம் சிறிதரன்

கிளிநொச்சி பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுவுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தை கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை...

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த...

நோர்வேயில் தடுப்பு மருந்து போட்டு 23 பேர் உயிரிழப்பு

நோர்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட...