A.35 வீதியில் தருமபுரம் பகுதியில் 10.01 .2021 அன்றைய தினம் அதிகாலை வீதியில் படுத்துறங்கிய கால்நடைகள் 6 வீதி விபத்தில் இறந்துள்ளன அன்மைக் காலமாக கால்நடைகள் வீதிவிபத்தில் இறப்பது அதிகரித்துவருவது ஒருபுரம் நோய்த்தாக்கத்தின் காரணமாக கால்நடைகள் இறப்பது ஒருபுரம் இது கால்நடைகளின் உரிமையாளர்களின் அலட்சியம் ஒருபுரம் வாகனசாரதிகளின் அலட்சியம் ஒருபுரம் தற்பொழுது பெரும்போக பயிர்செய்கை நடைபெற்று வரும் நிலையிலும் கூட கால் நடைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்லை.
இதன் காரணமாகவே அதிகமான வீதி விபத்துக்களில் கால்நடைகள் இறப்பது அதிகரித்து வருகிறது ஒரு காரணமாகும். அத்துடன் சாரதிகளின் அலட்சியப் போக்கும் ஒரு காரணமாகும். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன்நடவடிக்கை எடுப்பார்களா என சமுக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.