January 20, 2021, 1:57 pm

விவசாயிகளின் போராட்டத்திற்கு மீண்டும் ஆதரவை தெரிவித்த கனடா பிரதமரால் குழப்பநிலை!

இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், கனடா பிரதமர் மீண்டும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, அமைதியான போராட்டம் நடத்தும் உரிமையை கனடா எப்போதும் ஆதரிக்கும் என்று கூறினார்.

விவசாயிகள் நிலை குறித்து கவலை தெரிவித்தார். சில கனடா மந்திரிகள் மற்றும்எம்.பி.க்களும் இதுபோன்ற கருத்துக் களை தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்தியாவுக்கான கனடா தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பியது. அவரை வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தது. அவரிடம் கனடா பிரதமரின் கருத்துக்காக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கனடா பிரதமரும், அந்நாட்டு அரசியல் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளை, இந்தியாவின் உள்விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடாக கருதுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதேநிலை நீடித்தால், இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என இந்தியா எச்சரிக்கை விடுத்தது பற்றி செய்தியாளர்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பினர்.

இக்கேள்விக்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ, உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா துணை நிற்கும்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், கனடா பிரதமர் மீண்டும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

இனப்படுகொலையா எங்கே? சுரேஸ் சீற்றம்!

காலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்...

சிவயோகநாதனை புலனாய்வுத்துறை மூலம் அச்சுறுத்தும் இலங்கை அரசு! சீமான் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரும், குடிமக்கள் சமூக அமைப்பில் பங்காற்றி வரும் தமிழருமான சிவயோகநாதனை,புலனாய்வுத்துறையினர் மூலம் விசாரணை என்ற பெயரில் சிங்கள பேரினவாத அரசு அச்சுறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திருக்குரியது நாம்...

சுகாதார அமைச்சிற்குள் 10 பேருக்கு கொரோனா: ஒரு பகுதி மூடப்பட்டது!

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள நான்கு வெவ்வேறு அலகுகளில் இருந்து 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை உறுதிசெய்துள்ளார்.சுகாதார அமைச்சின்...

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இனப்படுகொலையா எங்கே? சுரேஸ் சீற்றம்!

காலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதுண்டு. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்...

சிவயோகநாதனை புலனாய்வுத்துறை மூலம் அச்சுறுத்தும் இலங்கை அரசு! சீமான் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரும், குடிமக்கள் சமூக அமைப்பில் பங்காற்றி வரும் தமிழருமான சிவயோகநாதனை,புலனாய்வுத்துறையினர் மூலம் விசாரணை என்ற பெயரில் சிங்கள பேரினவாத அரசு அச்சுறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திருக்குரியது நாம்...

சுகாதார அமைச்சிற்குள் 10 பேருக்கு கொரோனா: ஒரு பகுதி மூடப்பட்டது!

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள நான்கு வெவ்வேறு அலகுகளில் இருந்து 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை உறுதிசெய்துள்ளார்.சுகாதார அமைச்சின்...

நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...