தமக்கு மீண்டும் அணித்தலைவர் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது பந்தினை சுரண்டிய குற்றச்சாட்டில் அவருக்கும், டேவிட் வோர்னர் மற்றும் கெமரன் பன்க்ரப்ட் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்போது ஸ்டீவ் சுமித் அணித்தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அணியில் மீண்டும் இணைக்கப்பட்ட சுமித், தமக்கு அணித்தலைவர் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொண்டு செயற்பட்ட விருப்பமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.