குறைந்த தொகைக்கு ஏலம் போனதால் ஐபில் போட்டியை ஸ்மித் புறக்கணிப்பார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் மைக்கல் கிளார்க் சொல்கிறார்.
சமீபத்தில் நடந்த ஐபில் கிரிக்கெட் ஏலத்தில் அவுஸ்திரேலிய நட்ச்சத்திர துடுப்பாட்ட வீரர் ஸ்டிவன் ஸ்மித் ஐ ரூபா 2 .2 கோடிக்கு டெல்லி கேப்பிடல் அணி வாங்கியது. இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் மைக்கல் கிளார்க் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது –
20 ஓவர் கிரிக்கெட் இல் ஸ்மித் இன் செயல்பாடு சிறப்பாக இல்லை என்பதை அறிவேன். கடந்த ஐபில் போட்டி அவருக்கு சிறப்பாக அமையவில்லை. எனினும் ஐபில் ஏலத்தில் ஸ்மித் மிகக்குறைவான தொகைக்கு ஏலம் எடுக்கபட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த சீசனில் அவர் பெற்ற தொகையோடு ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு. வெறும் 2.2 கொடிக்காக அவர் 11 வாரங்கள் தனது நண்பர்கள், குடும்பத்தை பிரிந்து ஐபில் பொடியில் ஆடுவதற்காக இந்தியா செல்லமாட்டார் என்றே நினைக்கிறேன். அவரது முடிவு எப்படி இருக்கும் என்று அறிய ஆவலாக உள்ளேன் என்றார்.