இந்திய கிரிக்கெட் அணியின் நச்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. இவர் 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.ஹர்திக் பாண்டியா ஐபில் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐபில் 2021 இற்கான ஏலம் நடைபெற்ற நிலையில் ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைத்தளத்தில் சிறுவயது முதல் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கான பயணத்தை குறிப்பிடுகின்ற வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ஐபில் ஏலமானது எப்பொழுதும் தனது கிரிக்கெட் பயணத்தை நினைவு படுத்துவதாகவும், உங்கள் கனவுகளுக்கு உள்ள சக்தியை குறைவாக மதிப்பிட வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவானது கிரிக்கெட் இல் சாதிக்க விரும்பும் இளம் வீரர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது.
ஹர்திக் பாண்டியா பதிவு செய்த வீடியோ இதோ —