இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டி20ஐ போட்டிகள், அகமதாபாத்தில் உள்ள புதிய சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
டி20ஐ போட்டிகள் மார்ச் 12, 14, 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுவதோடு , அனைத்து போட்டிகளும் மைதானத்தில் 50% கூட்டத்தை கொண்டிருக்கும்.
இந்த ஐந்து டி20ஐ போட்டிகளுக்கான இந்திய அணியில் பல புதிய முகங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக கடந்தவருடம் ஐபில் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வரவிருக்கும் டி20 தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. இதில் ராகுல் தெவாட்டியாவின் பெயரும் இடம்பெறுள்ளது. இவர் கடந்த வருடம் நடைபெற்ற ஐபில் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார்.
