இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான் அவுஸ்திரேலியா எல்லாம் இனி ஒரு அணியே இல்லை, இந்தியாவை தோற்கடிப்பதில் இங்கிலாந்து கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டி 20 தொடரை இழந்தாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
குறிப்பாக அவுஸ்திரேலியாவை இந்திய அணி கடைசி டெஸ்ட்டில், வீழ்த்திய விதம் உலக கிரிக்கெட் ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்துவிட்டது.
இந்தியாவிற்கு தற்போது வரை பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்தியாவின் இந்த வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியால், கிரிக்கெட் உலகில் அவுஸ்திரேலியான் மதிப்பும் குறைந்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான், இனி அவுஸ்திரேலியா அணியுடனான ஆஷஸ் தொடர் முக்கியம் என இங்கிலாந்து அணி நினைக்க வேண்டியதில்லை. அவுஸ்திரேலியா இனியும் சிறந்த அணி இல்லை
அந்த அணியை விட்டுவிட்டு இந்தியாவை இந்திய மண்ணிலேயே வீழ்த்த இங்கிலாந்து அணி முயற்சி செய்ய வேண்டும். அதுதான் பெரிய சாதனை என ஸ்வான் கூறி உள்ளார்.