January 18, 2021, 4:43 pm

விரைந்து செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு! இதனால் பிரதமர் மகிந்த பிறப்பித்த உத்தரவு

எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு Cardiology Unit – Cardiac Catheterization Laboratory இரு கிழமைகளில் வர இருந்தது.

எனினும் இவ் வைத்திய இயந்திர உபகரணங்களை இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனினால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இரா.சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆகியோர் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவினை சந்தித்து இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதயவியல் பிரிவிற்கு கொண்டுவரப்பட வேண்டிய உபகரணங்கள் அனைத்தும் முன்னமே தீர்மானித்தபடி மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட வேண்டுமென இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவதானம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திர வன்னியாரச்சியினை வரவழைத்து இருதயவியல் பிரிவிற்கான உபகரணங்களை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கையளிப்பதற்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இவ் உபகரணம் இல்லாமையினால் பல வருடங்களாக மக்கள் உரிய நேரத்திற்கு சிகிச்சையின்றி பல சிரமங்களுக்கும் மத்தியில் வெளி மாகாணங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டிய பல உயிர்களை இழந்துள்ளோம். இப் பிரச்சினை இனி முடிவுக்கு கொண்டுவரப்படும். எமது கட்சி மற்றும் எனது செயல்பாடுகள் அனைத்தும் எமது மக்கள் சார்ந்ததாகவே என்றும் இருக்கும். நாம் வாய்ச்சொல் வீரர்களல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

திடீரென மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினால் நுவரெலியாவில் தொடர்ந்தும் பதற்றம்!- விசேட அதிரடிபடையினர் குவிப்பு

நுவரெலியா- கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது.பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை...

பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் ஆங்காங்கே ஒன்றுகூடும் எதிர்ப்பாளர்களால் கடும் பரபரப்பு!

அமெரிக்க ஜனாதிபதியாக நாளை மறுத்தினம் புதன்கிழமை ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் மாகாண அரசு தலைமையகங்கள் முன்பாக ஆயுதம் ஏந்திய சிலர் உட்பட சிறிய அளவிலான எதிர்ப்பாளர்கள் கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.வொஷிங்டனில்...

கனடாவில் சடுதியாக அதிகரிக்கும் உயிரிழப்பு; மொத்த கொரோனா பலி 18,000 –ஆக உயர்வு!

கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 149 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில் நாட்டில் பதிவானமொத்த கொரோனா மரணங்கள் 18 ஆயிரத்தைக் கடந்துள்ளன.ஞாயிற்றுக்கிழமை கனடா முழுவதும் 6,433 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்...

Stay Connected

6,241FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

காணி சுவீகரிப்பதற்காக பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டைதீவில் பதற்ற நிலை

விருந்தினர் விடுதி ஒன்று அமைப்பதற்காக மக்களின் காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டைதீவில் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.முன்னதாக ஒன்று திரண்ட மக்கள்...

யாழில் பொதுச் சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படுகின்றன !

டந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க இன்றைய தினம்...