January 21, 2021, 12:50 am

விமான சக்கரத்தில் தொங்கியபடி 11 மணி நேரம் பயணித்த நபர்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பல ஆயிரம் அடிகள் உயரத்தில் பதினொரு மணி நேரமாக விமானத்தின் சக்கரத்தில் தொங்கியவாறு பயணித்த நபர்கள் தொடர்பில் செய்திகள் வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந் நிலையில் அவ்வாறு பயணித்த நபர் ஒருவருக்கு இன்று பிரித்தானியாவில் குடியுரிமை கிடைத்திருக்கிறது. அவர்தான் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தெம்பா என்பவர்.

தென்னாபிரிக்காவில் பட்டினிச் சாவை எதிர்கொள்வதில் ஏற்பட்ட பயத்தின் காரணமாக இவரும் இவரது நெருங்கிய நண்பரான கார்லிடொ வலே என்பவரும் இந்த பயங்கரமான பயணத்தை மேற்கொண்டனர்.

30 வயது Themba Cabeka தனது நெருங்கிய நண்பரான Carlito Vale உடன் ஜூன் 18, 2015-ல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் களவாக பயணம் மேற்கொண்டார். விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி உறையவைக்கும் -60C குளிரில் சுமார் 11 மணி நேரம் இருவரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இருவருக்கும் இதுவே முதல் விமான பயணம். விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தெம்பாவும் அவரது நண்பரும் மயக்கமுற்றுள்ளனர். எனினும் அவர்கள் விமான சக்கரத்துடன் மின்சார கேபிள் மூலம் தம்மை பிணைத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இதனிடையே விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்னர் ஏற்கனவே பரிதாப நிலையில் இருந்த Carlito சுமார் 5,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து மரணமடைந்த நிலையில்Richmond பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீதிருந்து, அவரது சடலம் மீட்கப்பட்டது.

தெம்பா லண்டன் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டார். அதன் பின்னர் சுமார் 6 மாத காலம் கோமா நிலையில் தெம்பா சிகிச்சையில் இருந்துள்ளார். கோமாவில் இருந்து கண் விழித்த அன்று பொலிசார் முன்னெடுத்த விசாரணையிலேயே தெம்பாவுக்கு தமது நண்பர் Carlito தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது.

இகவும் சோகமான நீண்ட ஐந்தரை ஆண்டுகளுக்கு பின்னர் தெம்பா தற்போது தமது பெயரை மாற்றிக் கொண்டு, பிரித்தானிய குடியுரிமையும் பெற்று லிவர்பூல் பகுதியில் வசித்து வருகிறார்.

Related Articles

போதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர்

போதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஹைலெவல் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் உடை, துணிகள் திருடிய ஒருவரை மகரக பொலிசார் கைது செய்தனர். அவரிடம் போதைப்பொருள்...

இன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்று மொத்தமாக 768பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Stay Connected

6,361FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

போதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர்

போதைப்பொருள் பாவனைக்காக தனது சிறுநீரகமொன்றை விற்பனை செய்த நபர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஹைலெவல் வீதியில் நடைபாதை வியாபாரிகளிடம் உடை, துணிகள் திருடிய ஒருவரை மகரக பொலிசார் கைது செய்தனர். அவரிடம் போதைப்பொருள்...

இன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்று மொத்தமாக 768பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்கள்! இன்று மட்டும் 1,820 பேர் பலி

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 1820 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் கொரோனாவிற்கு பலியானவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.இந்த எண்ணிக்கை நேற்று பதிவான 1,610 மரணங்களை விட அதிகமாகும். தொற்றுநோய்...

வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்!

புது டில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து போராடி வரும் வேளையில், அச்சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான...