January 25, 2021, 2:49 pm

விசாரணையை விரைவுபடுத்துமாறு பிரதமர் உத்தரவு!

தெதர்லாந்து நாட்டை சேர்ந்த வண.ஜினரத்ன தேரர் (வயது 60) Ven. Jinarathana Thera of Netherlands, ஒருவரின் சடலம் காலி – ரத்கம களப்பு (Lagoon) பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த தேரர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தேரரை படுகொலை செய்தவர்கள் அவரை நீரில் மூழ்கடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 60 வயதான ஜீவரத்ன தேரர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்து காலி – ரத்கம பகுதியிலுள்ள தபோவனம் ஒன்றில் குறித்த தேரர் மத போதனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 5ம் திகதி பிச்சைப் பாத்திரம் ஏந்தி யாத்திரிகம் செய்யும் போது இந்த தேரர் காணாமல் போயிருந்த நிலையில் கடந்த 8ம் திகதி தேரரின் உடல் ரத்கம களப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.

தேரரின் கால்கள் கம்பியால் கட்டப்பட்டு, அதில் ஒரு கல் கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தேரர் யாரோ ஒருவரால் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடலை மூழ்கடிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று பிரேத பரிசோதனை காலி கராபிட்டி போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்டதுடன் உடல் பாகங்களை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மேலதிக பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறு புத்தசாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரம்:பொ. ஐங்கரநேசன்!

இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சிபெற முடியவில்லை. இதற்குத் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான காரணம். ஆனால், விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை...

மூடப்பட்டது தனியார் வங்கி

இரத்மலானையில் உள்ள தனியார் வங்கிகிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.குறித்த வங்கியில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையிலேயே வங்கி மூடப்பட்டுள்ளது.கடந்த வாரம் வங்கியின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இனம்...

தமிழ் முற்போக்கு கூட்டணி உடைவை நோக்கி?

தமிழ் முற்போக்கு கூட்டணி கலையும் அறிகுறிகள் ஆங்காங்கே வெளிப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவரே அதனை உறுதி செய்யும் பதிவு ஒன்றை தனது முகநூல் தளத்தில் இட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...

Stay Connected

6,384FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை ஈழ சினிமாவுக்கான பலமான அத்திவாரம்:பொ. ஐங்கரநேசன்!

இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சிபெற முடியவில்லை. இதற்குத் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான காரணம். ஆனால், விடுதலைப் புலிகளின் திரைப்படத்துறை...

மூடப்பட்டது தனியார் வங்கி

இரத்மலானையில் உள்ள தனியார் வங்கிகிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.குறித்த வங்கியில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையிலேயே வங்கி மூடப்பட்டுள்ளது.கடந்த வாரம் வங்கியின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இனம்...

தமிழ் முற்போக்கு கூட்டணி உடைவை நோக்கி?

தமிழ் முற்போக்கு கூட்டணி கலையும் அறிகுறிகள் ஆங்காங்கே வெளிப்பட்டு வந்த நிலையில் அதன் தலைவரே அதனை உறுதி செய்யும் பதிவு ஒன்றை தனது முகநூல் தளத்தில் இட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...

யாழில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக படைத்தரப்பின் பின்னணியில் சிலர் கோசம்:

யுத்தத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு பரிகாரம் தேடி தமிழனமே ஒரே குரலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதி கேட்டுள்ள நிலையில், படைத்தரப்பின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்று  சிலர் கோசமெழுப்பினர்.போராட்டத்தில் கலந்து கொண்ட...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கோட்டாபயவின் ஆணைக்குழு காப்பாற்றாது! –

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஆராயும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு நாட்டுக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை. இது வெறுமனே கண்துடைப்பு நாடகம்...