தென்மராட்சியில் ரௌடிகள் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு(6) இடம்பெற்ற இச்சம்பவத்தில் எழுதுமட்டுவாள், கிளாலி பகுதியை சேர்ந்த கனகசபை ஜெயக்குமார் (22) என்ற இளைஞனே வாள்வெட்டுத் தாக்குதலிற்கு இலக்கானார்.
காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.