யூரியா ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று வவுனியா- ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது. அதன் சாரதி தப்பி ஓடியுள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி யூரியாவை ஏற்றிச்சென்ற வாகனம் ஓமந்தை பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது.
வாகனம் முற்றாக குடைசாய்ந நிலையில் அதன் சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.