January 22, 2021, 8:14 pm

வவுனியாவில் பாடசாலை மாணவிக்கு கொரோனா; மூடப்படும் பாடசாலைகள்…

நேற்றைய தினம் வவுனியாவில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் சமூகத்தில் இருந்தும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • புதிய சாளம்பைக்குளம் உப கொத்தணியில் இருந்து மூன்று பேருக்கு
  • வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு
  • திருகோணமலையை சேர்ந்த நபர் ஒருவருக்கு
  • கற்குழியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவருக்கு
  • திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு

கற்குழியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி மற்றும் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் எழுமாறாக அவர்களிடம் மேற்கொண்ட PCR பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவி வருகின்றது.

இவற்றைவிட பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள தெற்கினை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் இருந்து இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா தெற்கு வலயத்தை சேர்ந்த நான்கு பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை இடை நிறுத்துவதாக வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இறம்பைக்கும் மகளீர் மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகாவித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயம், காமினி மகாவித்தியாலயம் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, கற்குழி மற்றும் திருநாவற்குளம் பகுதிகளில் தொற்று உறுதியானவர்களின் வீடுகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது – தாழ்நில பகுதி மக்கள் அவதானம்

கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசன நிணைக்கள பொறியியலாளரின் ஆலோசனை க்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல...

மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு..!

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும்...

Stay Connected

6,377FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது – தாழ்நில பகுதி மக்கள் அவதானம்

கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசன நிணைக்கள பொறியியலாளரின் ஆலோசனை க்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல...

மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு..!

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும்...

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் வேண்டும்!

தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின்...

அவுஸ்திரேலியா இனி ஒரு அணியே இல்லை! -இங்கிலாந்து முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான் அவுஸ்திரேலியா எல்லாம் இனி ஒரு அணியே இல்லை, இந்தியாவை தோற்கடிப்பதில் இங்கிலாந்து கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய...