January 24, 2021, 12:38 pm

வடமாகாணத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! அதில் 7 பேர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள்

வடக்கு மாகாணத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள், 7 பேர் பூநகரியைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டு பேர் மருதங்கேணியைச் சேர்ந்தவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவர்கள் 11 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

பூநகரியைச் சேர்ந்த 11 பேர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். அவர்களிடம் அந்த விடுதியில் வைத்து மாதிரிகள் பெறப்பட்டன. அதனால் அவர்கள் அங்கிருந்து தப்பித்து பூநகரிக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தப்பி வந்தமை தொடர்பில் கொழும்பிலிருந்து வடமாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அத்துடன் மூவருக்கு தொற்று உள்ளமை தொடர்பிலும் கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று உள்ள மூவரையும் கொவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள் ஏனைய 8 பேரையும் சுயதனிமைப்படுத்தியிருந்தனர்.

அவர்கள் 8 பேரின் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் 7 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மருதங்கேணியில் கொழும்பு சென்று திரும்பிய இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய சங்கானையைச் சேர்ந்த ஒருவருக்கும் உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று 248 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

Related Articles

ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நடவடிக்கையே! – மனோ விமர்சனம்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்."- இவ்வாறு தமிழ் முற்போக்குக்...

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????

இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது...

கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!

வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...

Stay Connected

6,383FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம்...