January 26, 2021, 1:02 pm

வடக்கில் தூபிகள் அனைத்தும் இடிக்கப்பட வேண்டும்-அமைச்சர் விமல் கருத்து !!

விடுதலைப் புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டும்.அமைச்சர் விமல் ஆவேச கருத்து.!

மரணித்த விடுதலைப்புலிகளை நினைவுத் தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்தல் நடத்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும்.

எனவே, விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியைத் துணைவேந்தர் இடித்து அகற்றியுள்ளார். இது அவரின் தற்றுணிவை எடுத்துக்காட்டுகின்றது. இறுதிப்போரில் மரணித்த பொதுமக்களை நினைவேந்தும் தூபி என்ற பெயரில் அங்கு அமைக்கப்பட்டிருந்தது புலிகளை நினைவேந்தும் தூபியே ஆகும். இதைப் பல்கலைக்கழத்தில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. அதற்கமைய நல்லதொரு தீர்மானம் எடுத்து அந்தத் தூபியைத் துணைவேந்தர் இடித்துள்ளார். மூவின மாணவர்களின் நன்மை கருதி இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்திருப்பாரென நான் நினைக்கின்றேன். எனவே, மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கல்வியைத் தொடர வேண்டும்” என்றார்.

Related Articles

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது வாள்வெட்டு தாக்கதல் – சாட்சியங்களை மறைக்க பொலிசார் முயற்சி!

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது வாள்வெட்டு தாக்கதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான சாட்சியங்களை மறைக்க பொலிசார் முஸ்திப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலைப்பாடு பதியில் உள்ள குடும்பம் மீது கடந்த 18ம்...

‘விழி பிதுங்கி தவிக்கும் ராஜபக்ச அரசு ‘-மனோ கருத்து

“எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி...

சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க இன்று அங்குணகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நீர்கொழும்பு, பல்லன்சேனை இளம் குற்றவாளிகள் சீர்திருத்த பள்ளியில் தங்க...

Stay Connected

6,386FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

இலங்கையின் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு..!

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு அறிவுறுத்துவது இலங்கையின் இறையாண்மயை அச்சுறுத்தவதாகவோ கேலிக்கு உள்ளாக்குவதாகவோ அமையாது என்று அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.காணொளி ஊடாக ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போது...

மணல் விலையைக் கட்டுப்படுத்த அரசின் தலையீடு அவசியம்: மஹிந்த அமரவீர

மணல் விலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசாங்கத்தின் தலையீடு அவசியமென சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.மணல் வியாபாரத்தில் ஈடுபடும் சங்கங்கள் சிலவற்றுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் இந்த...