January 23, 2021, 3:57 am

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

பொதுமக்கள் பண்டிகை காலத்தில் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்துஇ சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் கொரோனா தொற்று பரவுகின்ற வீதம் சற்று குறைவடைந்துள்ளது. நேற்று உடுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது தற்போதுவரை எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

அதே நேரத்தில் நேற்றுமுன்தினம் 3 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தின் பின்னர் 120 பேர் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் தொடர்புபட்ட வகையிலே சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது.

2,176 குடும்பங்களைச் சேர்ந்த 6,109 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அரசின் சுற்று நிரூபங்களுக்கமைய அவர்களுக்கு தேவையான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றதுடன் தொற்று இனங்காணப்பட்டவர்களுக்கும் அரசினுடைய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது அர்ப்பணிப்பு மிக்க சுகாதார பகுதியினருடைய சேவையின் காரணமாகவும் அதேபோல் பொதுமக்களுடைய ஒத்துழைப்பினாலும் ஓரளவுக்கு தொற்று நிலமையினை யாழ். மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

இருந்த போதிலும் அபாய நிலை இன்னும் நீங்கிவிடவில்லை. ஆகவே இது ஒரு பண்டிகை காலமாக இருக்கின்ற காரணத்தினால்இ அதேபோல சைவ ஆலயங்களிலும் விரத பூசைகள் இடம்பெற்றுவருகின்றன.

நத்தார் தினம் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற உள்ளன. பொதுமக்கள் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகவும் கவனமாகச் செயற்படுத்த வேண்டும்.

அநாவசியமாக கடைகளுக்கு செல்லுதல் அல்லது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடைக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். அநாவசியமான ஒன்றுகூடல்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

சுகாதார பிரிவினுடைய அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் பின்பற்றி முகக்கவசம் அணிந்து அதேபோல தொற்று நீக்கி திரவங்களை பாவித்து தங்களுடைய கடமைகளை புரிதல் அவசியம்

இருந்தபோதிலும் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்தல் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

மேலும் இந்த காலம் மிக அபாயமான காலமாக இருக்கின்றமையினால் அனைவருடைய ஒத்துழைப்பும் இந்த விடயத்திற்கு தேவை.

பாடசாலைகள் தற்பொழுது தற்காலிகமாக இரண்டு விடயங்களில் மூடப்பட்டு இருந்தாலும் கூட கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு இணங்க எதிர்வரும் மாதம் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ளது. அதன் போதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதல் அவசியம்.

தற்போதுள்ள சவால்களுக்கு அனைவரும் ஒத்துழைத்து செயற்படுவதன் மூலம் எமது மாவட்டத்தினை தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

Related Articles

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 276 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

Stay Connected

6,380FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கொரோனா தொற்றுக்குள்ளான 787 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 787 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,076 இலிருந்து...

இலங்கையில் மேலும் 02 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 276 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது – தாழ்நில பகுதி மக்கள் அவதானம்

கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசன நிணைக்கள பொறியியலாளரின் ஆலோசனை க்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல...

மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு..!

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும்...