நேற்றைய தினம் (08) இரவு இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என
யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டனர். பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்றைய தினம் இரவு எட்டு மணி தொடக்கம் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது டுவிட்டர் தளத்தில் அது தொடர்பாக கருத்துவெளியிட்டுள்ளார்.
முன்னைய உபவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் பதவிநீக்கப்பட்டமைக்கு அவர் நினைவிடத்தை நிர்மூலமாக்காமையே காரணம்.
தற்போதைய ஜனாதிபதியால் புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டமைக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக நினைவிடத்தை நிர்மூலமாக்கவேண்டும் என்ற விடயம் உள்ளது என்பதை நம்புவதற்கு என்னிடம் உறுதியான காரணங்கள் உள்ளன என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.